‘நான் என்ன கேட்டேன்’... ‘நீங்க இப்டியா பண்ணுவீங்க?’... ‘ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி காரியம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 10, 2019 07:27 PM

தான் கேட்டு தந்தை ஜாகுவார் கார் வாங்கித்தராததால், தனது பி.எம்.டபிள்யூ  காரை இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில், ஆற்றின் உள்ளே தள்ளியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

In Haryana, a young man dumped his BMW in a river

அரியானா மாநிலத்தின் யமுனா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிலக்கிழார். பெரும் பணக்காரரான அவரிடம் சென்று, அவரது மகன் ஜாகுவார் கார் கேட்டுள்ளார். ஆனால், தந்தை ஜாகுவார் கார் வாங்கித் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், தனது பி.எம்.டபிள்யூ காரை அங்குள்ள யமுனா ஆற்றில் இறக்கியுள்ளார்.

ஆற்றில் கார் அடித்துச் செல்லப்படும் காட்சியையும் வீடியோவாக தனது செல்போனில் அவர் படம்பிடித்துள்ளார். ஆனால், ஆற்றின் நடுவே கார் சிக்கிக்கொண்டு நின்றது. இதனை அடுத்து, அங்கு கூட்டம் கூட துவங்கியுள்ளது. இதனால், காரை மீட்கும் முயற்சியில் அந்த இளைஞர் ஈடுபட்டார்.

தகவலறிந்து வந்த போலீசார் இந்த விவாகரம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆற்றில் அடித்துச் செல்லவிருந்த பி.எம்.டபிள்யூ காரின் விலை சுமார் ரூ.35 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. ‘இந்தியா டிவி’யில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

Tags : #BMW #JAQUAR #CAR #HARYAN #YAMUNARIVER #YOUTH