'இப்படியா வருவீங்க?'.. 'பணியில் இருந்த டிராஃபிக் காவலருக்கு'.. நள்ளிரவில் நேர்ந்த பதைபதைப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 20, 2019 11:04 AM

டிராஃபிக் இன்ஸ்பெக்டர்களின் தலையாய கடமையாக இருப்பது வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான டிரைவிங்கிற்கு உதவுவதுதான்.

Traffic Police hit by car, while stopping over-speeding car

சாலை பாதுகாப்பினை அறிவுறுத்தும் டிராஃபிக் காவலர்கள், வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர் என்பது முக்கியமானது. சமீப காலமாக, ஹெல்மெட் போடுவதற்கான அவசியங்களை வலியுறுத்தியபோது டிராஃபிக் காவலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்குமான முரண்பாடுகள் எழுந்தன.

இந்த நிலையில், ஹரியானாவில் வேகமாக வந்த காரினை மடக்க நினைத்த டிராஃபிக் காவலர் ஒருவருக்கு நேர்ந்த கதி, இதர போக்குவரத்து காவலர்களுக்கிடையே பெரும் படபடப்பைத் தந்துள்ளது. ஹரியானாவில் உள்ள குருகிரம் பகுதியில் செக்‌ஷன் 8-ல் உள்ளது ஜோது பார்க் சாலை.

இங்கு வாகன தணிக்கையிலும், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தவர் போக்குவரத்துக் காவலரான ரோஹித். ஆனால் அப்போது சாலை விதிமுறைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை மீறி வெகுவேகமாக வந்த காரினை போக்குவரத்துக் காவலர் ரோஹித் தடுத்தபோது, அவரை காரின் போனட்டின் மீது அடித்துத் தூக்கி ஏற்றிக்கொண்டு சிலதூரம் பயணித்த அந்த கார், ரோஹித் கீழே விழுந்ததும் பறந்துள்ளது.

இதுகுறித்து, அந்த காரை ஓட்டிவந்தவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளதோடு, வாகன ஓட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரக்கமின்றி போக்குவரத்து காவலர் மீதே இப்படி காரை விட்டு ஏற்றிவிட்டு போகும் செயல் பெரும் பதைபதைப்பை எற்படுத்தி வருகின்றன.

Tags : #ROADSAFETY #TRAFFICPC #DRIVER #CAR #BIZARRE