'ஃபிரண்டேய் டென்ஷன் ஆயிட்டாப்ல'.. குடிபோதையில் அரிவாளுடன் நண்பனையே.. பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 06, 2019 05:02 PM

குடிபோதை ஆசாமி ஒருவர், நண்பர்கள் தினத்தன்று நண்பனை நடுரோட்டில் ஓடவிட்டு அரிவாளால் வெட்டித் தாக்கியுள்ள சம்பவம் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

Drunken Man Assault his own friend in Public on Friends Day

புதுக்கோட்டையில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரும் அதே பகுதியில் உள்ள  இம்மனாம்பட்டியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரும் திக் ஃபிரண்ட்ஸ். இருவருக்கும் மதுப்பழக்கம் அதிகமாக இருந்ததால், நண்பர்கள் தினத்தைக் காரணம் காட்டி இருவரும் ஆசை தீர குடித்துள்ளனர்.

குடித்தால், சும்மா இருப்பார்களா? பேச்சு தொடங்கியுள்ளது. பேச்சு கொஞ்சம்  கொஞ்சமாக வரம்புகளை மீறி ஒருவரையொருவர் சுயமரியாதை இல்லாமல் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.  அவ்வளவுதான், பேச்சு வாதமாகி, வாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் நடுரோட்டில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ரவி சுந்தரத்தை அரிவாள் கொண்டு வெட்டியுள்ளார். இதனைத் தடுக்க வந்தவர்கள் மீதும் ரவி அரிவாளை ஏவ முயற்சித்துள்ளார். அதன் பின்னர் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ரவி மற்றும் சுந்தரம் இருவரையும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த வழக்கில் கைது செய்ததோடு, ரவியை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : #PUDUKOTTAI #BIZARRE #FRIENDSDAY