'துப்பாக்கி காட்டி பலாத்காரம்'.. 'தப்பி வந்தபோது லிஃப்ட் கொடுத்தவர்கள் 'வெறிச்செயல்'.. '15 வயது இளம்' பெண்.. 'உச்சகட்ட கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 08, 2019 03:48 PM

15 வயது மதிக்கத்தக்க வளரிளம் பருவப் பெண்ணுக்கு நேர்ந்துள்ள கொடூரமான சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

minor girl raped while asking lift after gang raped

ஹரியானாவில் உள்ள புன்ஹானா பகுதியில் உள்ள தந்தை ஒருவர், கடந்த வாரம் தனது 15 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் கடத்தியதாகவும், அதன் பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாகவும் அளித்த புகாரின் பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பிரிவு 164-ன் வாக்குமூலம் பெறப்பட்டது.

சென்ற மாத இறுதியில் கடத்தப்பட்ட இந்த பெண்ணை 2 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு, மேலும் இரு இளைஞர்களை அந்த தனிப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அவர்களும் கூட்டாக சேர்ந்து துன்புறுத்தியுள்ளனர். அதில் இருவர் நாட்டுத் துப்பாக்கி காட்டி, இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.  இவர்களிடம் இருந்து தப்பியோடி வந்த இந்த பெண் வழியில் வந்த காரிடம் லிஃப்ட் கேட்டு, தன்னை காப்பாற்றிக் கொண்டு செல்லுமாறு வேண்டியுள்ளார்.

ஆனால் அந்த இளைஞர்களும் காரில் ஏற்றி இந்த பெண்ணை மேலும் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது. அதன் பின்னர் கிராமத்தின் ஒரு பகுதியில் அந்த பெண்ணை கவலைக்கிடமான நிலையில் காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். அதன் பின்னர் முதலில் தயங்கி, பின்னர் அந்த பெண் தன் பெற்றோர்களிடம் உண்மையைக் கூறியதன் பேரில், அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், பதின்பருவப் பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் மீது பிரிவு 6, 34, 363, 366ஏ, 506 ஆகியவற்றின் கீழ், கடத்தல், பதின்பருவப் பெண்ணை பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேற்கொண்டு வழக்கு பெண் போலீஸாரின் கைகளுக்கு மாற்றப்பட்டு, அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

Tags : #RAPE #GANG #MINOR GIRL #BIZARRE #SAD