"நிறுத்து... வண்டிய நிறுத்து...இன்னைக்கு 'பந்த்' வண்டி போகாது..." 'விமானத்தின்' முன் படுத்து மறியல் செய்த 'மர்ம நபர்'... 'காவல்' நிலையத்தில் படுக்க ஏற்பாடு செய்த 'போலீசார்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் மர்ம நபர் ஒருவர் பயணிகள் விமானம் முன்பு படுத்து மறியல் செய்த சம்பவம் விமானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராஜா போக் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் சுமார் 46 பயணிகளுடன் ஜெய்ப்பூர் புறப்பட தயாராக இருந்த விமானம் முன்பாக தரையில் படுத்து மறியலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த விமானி, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். விரைந்து வந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவரை கைது செய்தனர்.
மர்மநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 25 வயதான அந்த இளைஞர், அதிக பாதுகாப்பு நிறைந்த விமான நிலையத்திற்குள் எப்படி வந்தார் என்பது பற்றியம் விசாரிக்கப்பட்டு வருகிறது. காந்திநகர் போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் பயணிகள் மீண்டும் சோதனைக்குப் பிறகு விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
