மகனின் 'காதலி' என்றும் பாராமல்... தந்தை செய்த 'படுபாதக' செயல்... கதறித் துடித்த 'இளம்பெண்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 31, 2020 10:42 AM

மகனின் காதலியை கடத்தி பலாத்காரம் செய்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தம்பதியினரும் சிக்கினர்.

Police arrested a businessman who abducted his son\'s girlfriend

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்த கருப்பு நித்யானந்தம் என்பவர், காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் முகேஷ்கண்ணன் தன்னுடன் ஐ.டி.ஐ. படித்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

படித்து முடித்த பிறகு இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தனர். மகன் காதலிப்பதை விரும்பாத கருப்பு நித்யானந்தம் அவர்கள் காதலைத் துண்டிக்க ரகசிய திட்டம் தீட்டினார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்பு நித்யானந்தம், தனது மகனின் காதலி வீட்டுக்கு சென்று அந்த பெண்ணை தனியாக சந்தித்து, தன்னுடன் வந்தால் மகனுக்கு அவரை திருமணம் செய்து வைப்பதாக கூறி உள்ளார்.

இதை நம்பி அந்த பெண், அவருடன் சென்றார். ஆனால் கருப்பு நித்யானந்தம் செம்போடை பகுதிக்கு அந்த பெண்ணை காரில் கடத்தி சென்று, அங்கு உள்ள ஒரு கடையில் வைத்து, மிரட்டி அந்த பெண்ணுக்கு தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

பின்னர் அந்த பெண்ணை அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஒருவருடைய வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் அந்த வீட்டில் இருந்து தப்பிச்சென்று வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கருப்பு நித்யானந்தம் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு உடந்தையாக அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி பவுன்ராஜவள்ளி ஆகியோர் செயல்பட்டதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பு நித்யானந்தம், சக்திவேல், பவுன்ராஜவள்ளி ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

Tags : #NAGAI #VEDHARANYAM #POLICE ARREST #RAPIST