‘இப்படியும் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்!’.. ‘இளம் பெண்ணின் வித்தியாச முயற்சி’.. ‘வைரலாகும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 19, 2019 07:04 PM

மத்தியப்பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது நடனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Viral Video MP Girl Manages Traffic With Her Dance Moves

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபி ஜெயின் (23). புனேவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ  படித்துவரும் இவர் படிப்பின் ஒரு பகுதியாக 15 நாட்களுக்கு வாகன ஓட்டுகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வலராக செயல்பட விரும்பியுள்ளார்.

இதையடுத்து இந்தூர் பகுதி போலீஸ் கூடுதல் ஆணையரை அணுகிய சுபி தனது விருப்பத்தைக் கூறி அனுமதி கேட்டுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட ஆணையர் 15 நாட்கள் இந்தூர் சாலையில் விழிப்புணர்வை ஏற்படுத்த அனுமதித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மாணவி சுபி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் அணிதல் போன்ற விதிமுறைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை தனது நடனம் மூலம் ஏற்படுத்தி வருகிறார்.