'பிரபல' சிட்டி பஸ் ஸ்டாப்பில்.. ஓடிய 'ஆபாச' வீடியோ.. பயணிகள் 'கடும்' அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 22, 2019 11:17 PM

பல ஆயிரக்கணக்கான பேர்  வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் ஆபாச வீடியோ ஓடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Blue film runs at bus stop, passenger captures on mobile

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் அமைந்துள்ள ஹோசங்கபாத் சாலையில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அங்கிருக்கும் பணம் வசூலிக்கும் இயந்திரத்தில் உள்ள டிஸ்பிளேவில் ஆபாச வீடியோ ஓடியுள்ளது. இதைப்பார்த்த பயணி ஒருவர் வீடியோ எடுக்க, அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் வந்து செல்லும் பேருந்து நிறுத்தத்தில் இந்த வீடியோ ஓடியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து போபால் மாநகராட்சி மற்றும் போபால் சிட்டி லிங்க் லிமிடெட் இயக்குனர் கேவால் மிஸ்ரா, '' பெறப்பட்ட தகவல்களின்படி அக்டோபர் 28-ம் தேதி இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் செல்லுக்கு புகார் அளிக்கும்படி பிசிசிஎல் அதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கிறேன்,'' என கூறியிருக்கிறார்.

இது மிகவும் சீரியஸான விஷயம். இதுகுறித்து உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி கார்ப்பரேஷன் அதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கிறேன் என, போபால் நகர மேயர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார்.