‘காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி’!.. ‘ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்’.. சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 05, 2019 11:04 AM

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

College girl attacked by youth near Chromepet in Chennai

சென்னை குரோம்பேட்டை சாந்தி நகர் அருகே கல்லூரி மாணவி ஒருவர் கணினி பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். அப்போது பொன் பாக்கியராஜ் என்ற இளைஞர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு, பயிற்சி வகுப்பில் இருந்து வெளியே வருமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து வெளியே வந்த கல்லூரி மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு பாக்கியராஜ் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்தியுள்ளார். இதனை அடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #COLLEGESTUDENT #ATTACKED #CHENNAI #CHROMEPET