‘13 பேருடன்’ கிளம்பிய கார்... ‘அசுரவேகத்தில்’ லாரி மீது மோதி... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 20, 2020 05:00 PM

மகாராஷ்டிராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Maharashtra Accident 6 Killed 7 Injured As Car Rams Into Lorry

மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 13 பேருடன் கார் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. இந்நிலையில் சந்திரபூர் - முல் பகுதியில் போய்க்கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற சரக்கு லாரியின் மீது அசுரவேகத்தில் மோதியுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த 7 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #MAHARASHTRA