'எல்லா விதமான கிரிக்கெட்டிலும்'... 'இவர்தான் தலைச் சிறந்த வீரர்'... 'இந்திய வீரரை புகழ்ந்த நியூசிலாந்து கேப்டன்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 20, 2020 04:58 PM

உலக கிரிக்கெட்டில் 3 விதமான ஆட்டங்களிலும் இந்திய அணியில் யார் சிறந்த வீரர் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

Virat Kohli is the Best Without Doubt, KL Rahul Out in Test

வெலிங்டனில் நாளை இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இன்றும் ஆடும் லெவன் அணியை வெளியிடாத நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘ஒருநாள், டெஸ்ட், 20 ஓவர் ஆகிய 3 விதமான ஆட்டங்களிலும் சந்தேகமின்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் தற்போது மிகச் சிறந்த வீரராக திகழ்கிறார்’ என்றார்.

இந்திய அணி தற்போது சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பந்துவீச்சாளர்களை ஒருங்கே கொண்டுள்ளதாகவும், அதனால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் வில்லியம்சன் புகழ்ந்தார். மேலும் ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருக்கும் பாயிண்ட் சிஸ்டம் சரியின முறையல்ல என்று கூறிய கேன் வில்லியம்சம், பாயிண்ட் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் உத்தேச அணி வெளியாகி உள்ளது. அதில் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரண்டு தொடர்களிலும் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுலுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #VIRATKOHLI #CRICKET #IND VS NZ #KANE WILLIAMSON