'தமிழகத்தில் 1000 கோடிக்கு மேல் சொத்து'... 'வெளியான கோடீஸ்வரர் லிஸ்ட்'... முதலிடம் பிடித்த மாவட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலை HURUN REPORT INDIA AND IIFL wealth நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

'HURUN REPORT INDIA AND IIFL wealth' நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருப்பவர், சன் நெட்வொர்க் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன். இவர் 19 ஆயிரத்து 100 கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அளவில் கலாநிதி மாறன் 43- வது இடத்தை பிடித்துள்ளார். அடுத்ததாக ZOHO secure நிறுவனத்தின் வெம்பு ராதா 9,900 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், 7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் வெம்பு சேகர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழகத்தின் பெரிய ஜவுளி நிறுவனமான போத்தீஸ் நிறுவனத்தின் உரிமையாளர், சடையாண்டி மூப்பனார் 7,100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்திய அளவில் 125 -வது இடத்தில் உள்ளார். ஹாட்சன் அக்ரோ PRODUCTS- ன் RG சந்திரமோகன் 7 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5- வது இடத்தை பிடித்துள்ளார். கவின் கேரின் CK ரங்கநாதன் 6- வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 5,300 கோடியாக உள்ளது.
இதனிடையே கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் 62 சதவிதிதத்தினர் அதாவது 34 பேர் சென்னையில் வசிப்பவர்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையிலிருந்து 12 பேரும் திருப்பூரிலிருந்து 4 பேரும் சேலத்திலிருந்து 3 பேரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்திய அளவிலான கோடீஸ்வரர்களின் பட்டியலில் 7 பெண்கள் உள்பட 16 பேர் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.
இதற்கிடையே தமிழகத்தில் கடந்த ஆண்டை விட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜவுளித்துறையை சேர்ந்த 16 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
