VIDEO: அப்பா.. 'லவ்' பெயிலியர் ஆயிடுச்சுப்பா.. உன் மூஞ்சை 'கண்ணாடில' பாரு.. தரமான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Dec 03, 2019 02:02 PM
பொதுவாக அப்பாக்கள், பையன்களிடம் மிகவும் டெரராக இருப்பார்கள் என்று சொல்வார்கள் (ஒருசில அப்பாக்கள் இதில் விதிவிலக்கு) இதனால் பையன்கள் பெரும்பாலும் தந்தையிடம் எதையும் சொல்லமால், தாயிடம் தான் சொல்வார்கள்.

ஆனால் இந்த வீடியோவில் தனக்கு லவ் பெயிலியர் ஆனதை ஒரு பையன் அப்பாவிடம் வந்து சொல்கிறான். பதிலுக்கு அந்த அப்பா அவனை செமையாக கலாய்த்து தள்ளுகிறார். அதே நேரம் இன்று சிறு சிறு விஷயங்களுக்கு கூட பையன்கள் கையை அறுத்து கொள்வது, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போன்றவற்றை செய்கிறார்கள் என்பதையும் அழகாக எடுத்துரைக்கிறார்.
அப்பா லவ் ஃபெயிலியர் ஆயிடுச்சு ப்பா...
உன் மூஞ்சி எல்லாம் பார்த்து ஒரு பொண்ணு லவ் பண்ணுச்சா?
😂😂😂😂😂😂 pic.twitter.com/hBmI1XiKBd
— THE CONTRACTOR αмαяαη (@leochordia) December 1, 2019
தொடர்ந்து எனக்கென்னப்பா கொறை? என்று கேட்கும் மகனிடம், உன் மூஞ்சை கண்ணாடில பாரு? உன் மூஞ்ச பார்த்தும்மா அந்த பொண்ணு உன்ன லவ் பண்ணுச்சு? என்று பையனை வாருகிறார். லவ்வா பண்ற? தொலைச்சுப்புடுவேன் ராஸ்கல் என்று கூறும் அப்பாக்களுக்கு மத்தியில், பையனை கிண்டல் செய்து, அவனுடன் சரிக்குசரி உரையாடும் இந்த அப்பாவை பிடித்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
