‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘மழைநீர்’ தேங்கிய பள்ளத்துக்குள் கவிழ்ந்த கார்.. ‘நொடிப்பொழுதில்’ மூழ்கிய பரிதாபம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 02, 2019 05:21 PM

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Pollachi Accident Kerala Man Dead As Car Falls Into RainWater Pit

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. பைனான்ஸ் மற்றும் பருப்பு வியாபாரம் செய்துவந்த இவர் இன்று அதிகாலை தனது மனைவியின் உறவினர் ஒருவருடைய திருமணத்திற்கு செல்வதற்காக பொள்ளாச்சி வழியாக தாராபுரம் ரோட்டில் சென்றுகொண்டிருந்துள்ளார். கார் சுந்தரகவுண்டனூர் அருகே போய்க்கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீருக்குள் கார் நொடிப்பொழுதில் மூழ்கியுள்ளது. சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெகமம் போலீஸார் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு காரை தண்ணீரிலிருந்து மீட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காருடன் தண்ணீருக்குள் மூழ்கிய சுப்ரமணியன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #KERALA #HEAVYRAIN #CAR #MARRIAGE #DEAD #HUSBAND #WIFE