VIDEO பைக்கில் 'திருமண' ஊர்வலம்..இளைஞர்களுக்கு 'நொடியில்' நேர்ந்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Nov 18, 2019 01:52 PM
பைக்கில் திருமண ஊர்வலம் நடத்திய இளைஞர்கள் மீது கார் மோதிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருமண நிகழ்வினை கொண்டாட பைக்கில் ஊர்வலமாக சென்றுள்ளனர். ஹெல்மெட் அணியாமல் ஒவ்வொரு பைக்கிலும் மூன்று பேர் ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் மணமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
shocking accident Video ! car crashes into a wedding party's bike rally in Kasargodu, Kerala . pic.twitter.com/pLl6Dl3nFY
— Nisha Purushothaman (@NishaPurushoth2) November 17, 2019
இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கிளம்பி பைக்கில் மெயின் ரோட்டுக்கு வந்தபோது, வேகமாக வந்த கார் ஒன்று அவர்களை இடித்து தள்ளியது. இதில் சிலர் அந்தரத்தில் பறந்து கீழே விழுந்துள்ளனர். மற்றும் சிலருக்கு அடிபட்டுள்ளது. விபத்துக்கு உள்ளானவர்களின் நிலை குறித்து தெளிவாக தெரியவில்லை.
எனினும் விபத்தில் சிக்கியவர்களுக்கு அடி பலமாக பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பலரும் இதுபோன்ற ஊர்வலங்கள் தேவையா? என ஆதங்கப்பட்டு உள்ளனர்.
