'மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்க ப்ளீஸ்!'.. 'கோவை விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரியின் கால் அகற்றம்!'.. தவிக்கும் பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 15, 2019 11:16 PM

கோவையில் கொடிக்கம்பம் விழுந்த போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜேஸ்வரி என்கிற அனுராதாவின் மீது லாரி ஏறி விபத்துக்குள்ளான சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Coimbatore Rajeshwaris Parents seeking medical help to save her

இந்த சோக சம்பவத்தை தொடர்ந்து அதிவேகமாக லாரி ஓட்டி வந்ததாக லாரி ஓட்டுநர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ராஜேஸ்வரி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகளும் சோதனை செய்யப்பட்டன. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கள் மகள் இன்னும் சுய நினைவுக்கு திரும்பவில்லை என்றும், அவரது மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியில்லை என்றும் அவரது பெற்றோர்கள் நாகானந்தன் மற்றும் சித்ரா தம்பதியர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதனிடையே ராஜேஸ்வரி என்கிற அனுராதாவின் கால்களில் செயற்கையாக ரத்த நாளங்கள் பொருத்தப்பட்டும் பலனின்றி, அவரது இடது கால்கள் அகற்றப்பட்டுள்ளன. சில நாட்கள் கழித்தே அவரது வலது காலில் உள்ள எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் ராஜேஸ்வரி என்கிற அனுராதாவின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ நினைப்பவர்கள் உதவக்கோரி அம்மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றினை வங்கிக் கணக்கு விபரங்களை இணைத்து வெளியிட்டுள்ளது. ராஜேஸ்வரிக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் இந்த இணைப்பை சொடுக்கலாம்.

https://milaap.org/fundraisers/support-rajeshwari-naganathan?utm_source=facebook&utm_medium=fundraisers-header&mlp_referrer_id=141779

கோவை கோகுலம் பார்க்கில் சில நாட்களுக்கு முன்னரே கணக்காளராக பணியில் சேர்ந்த ராஜேஸ்வரியின் குடும்பம் பொருளாதார ரீதியில் பின் தங்கியது என்பதால் அவரின் விபத்து சம்பவம் அக்குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #ACCIDENT #HOSPITAL #RAJESWARI #ANURATHA #HELP #MEDICAL