‘அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து’... 'தாய் மற்றும் 2 குழந்தைகளுக்கு’... ‘ ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்’'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 17, 2019 08:09 PM

அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த தாய், மகள், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

mother, daughter, son died in bike and private bus accident

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள வெள்ளையூரைச் சேர்ந்தவர் சந்திரா(40) . இவரது மகள் நித்யா(18), மகன் சக்திவேல்(16) ஆகிய 3 பேரும், ஒரே இருசக்கர வாகனத்தில், வெள்ளையூரில் இருந்து கெங்கவல்லிக்கு சென்று கொண்டு இருந்தனர். தெடாவூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேகத்தில், ஆத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.  இந்த கோர விபத்தில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #ACCIDENT #SALEM