'நிறுத்தி வைக்கப்பட்ட கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து!'.. 'நள்ளிரவில் பிரபல பாடகிக்கு நடந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 15, 2019 10:01 AM

பிரபல மராத்தி பாடகி கீதா மாலி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Popular Marati singer geeta mali dies in road accident

ஏராளமான திரைப்படங்களிலும், தனி ஆல்பங்களிலும் பாடியுள்ள பிரபல மராத்தி பாடகி கீதா மாலி இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்கா சென்றுவிட்டு மும்பை திரும்பியபோதுதான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தனது கணவர் விஜய்யுடன் நாசிக் நகரில் இருக்கும் சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது நேற்று அதிகாலை மோதி இவர்களின் கார் விபத்துக்குள்ளானது. 

தானே மாவட்டம் சாஹ்பூர் அருகே நடந்த இந்த விபத்து சம்பவத்தில் கீதா மாலி உயிரிழந்தார். அவரது கணவர் விஜய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Tags : #ACCIDENT #SINGER