'நொடியில் நடந்த கோர விபத்து!'.. 'பள்ளத்தாக்கில் விழுந்த பயணிகள் வாகனம்'.. 16 பேர் பலியான சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 12, 2019 07:44 PM
ஜம்மு காஷ்மீரில் பயணிகள் வாகனம் கவிழ்ந்து விழுந்ததில் சுமார் 16 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியத் துணைக் கண்ட நிலப்பரப்பில் பெருகி வரும் விபத்துக்கள் அதிர்ச்சிகரமான பல புள்ளிவிவர முடிவுகளை கொடுக்கின்றன. கடைசி 10 ஆண்டுகளில் 55 ஆயிரம் விபத்துக்களில் 10 ஆயிரம் பேர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய அதிர்வு தரும் ஆய்வுகளுக்கு மத்தியிலும் விபத்துக்கள் ஓயந்தபாடில்லை.
ஜம்மு காஷ்மீர் டோடா மாவட்டத்தின் மர்மட் பகுதியில் சென்றுகொண்டிருந்த பயணிகள் வாகனம் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், இன்று மதியம் 2.45 மணியளவில் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 2 குழந்தைகள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலும், 4 பேர் மருத்துவமனை செல்லும் வழியிலும் பரிதாபமாக பலியாகினர்.
இந்த கோர விபத்தில் ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து அம்மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
