'அம்மா உன்ன விட்டுற மாட்டேன்'...'தாய்க்காக மகள் எடுத்த ரிஸ்க்'...நெஞ்சை உலுக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 15, 2019 07:40 AM

தாயை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என போராடிய மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mom and Daughter Die After Getting Strangled in Lake in Thiruvallur

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு மண்ணொளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுணா. இவரது கணவர் ஜென்சிராமன் ஏற்கனவே இறந்து விட, மகன் கமலக்கண்ணன் மற்றும் மகள் ரோஜா ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் எருமை மாடுகளை வளர்த்து வந்த நிலையில், அவற்றை தினமும் ஏரிக்கு அருகே கூட்டி சென்று மேய்ப்பது வழக்கம். இந்தநிலையில் நேற்று வழக்கம் போல மாடுகளை அங்கிருந்த திருநின்றவூர் ஏரிக்கு அருகே கூட்டி சென்று மேய்த்து கொண்டிருந்தார்கள்.

இதனிடையே அங்கிருந்த மாடுகள் ஏரிக்குள் இறங்க, அவற்றை மேல கொண்டு வருவதற்காக சுகுணா ஏரியில் இறங்கினார். அப்போது ஏரியில் இருந்த சேற்றில் அவர் எதிர்பாராத விதமாக சிக்கி கொண்டார். தாய் சேற்றில் சிக்கி கொண்டதை பார்த்த மகள் ரோஜா அதிர்ந்து போனார். இதையடுத்து தாயை காப்பாற்ற அவரும் ஏரிக்குள் இறங்கினார். அவர் எவ்வளவு முயன்றும் அவரது தாயை காப்பாற்ற முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் மகள் ரோஜாவும் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார். ஆனால் நடந்த சம்பவங்கள் எதுவும் தெரியாமல் மகன் கமலக்கண்ணன் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து இரவு வந்து பார்த்தபோது தாயும், தங்கையும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடியுள்ளார். காலையில், ஏரியின் அருகே சென்று பார்த்த போது 2 சடலங்கள் மிதந்து வந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே தந்தையை இழந்த கமலக்கண்ணன், தற்போது தாயையும், தங்கையையும் பறிகொடுத்து விட்டு கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.

Tags : #ACCIDENT #THIRUVALLUR #STRANGLED #LAKE WATER