‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்து முடிந்த பயங்கரம்.. ‘தனியார் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 15, 2019 08:01 PM

தனியார் பேருந்து ஒன்று சாலையோரமாக இருந்த மரத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Nagai Driver Passengers Injured In Private Bus Accident

காரைக்காலில் இருந்து சிதம்பரம் நோக்கி கிளம்பிய தனியார் பேருந்து ஒன்று பொறையார் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையோரமாக இருந்த மரத்தின்மீது மோதியுள்ளது. மோதியதில் கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து அருகிலிருந்த வயல்வெளியில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பேருந்து ஓட்டுநர் நடராஜன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இதில் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட பயணிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : #ACCIDENT #BUS #INJURED #NAGAI