'நாங்க கல்யாணம் பண்றதுல...' உங்களுக்கு என்னங்க பிரச்சனை...? 'இதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத வேலை...' - சர்ச்சையில் வைரலான 'திருமண' புகைப்படம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 45 வயதான ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு இணையத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான மேகனா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே மேகனாவின் கணவர் யாருக்கும் ஏதும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடி விட்டார். இதுநாள் வரை அவரை குறித்து எந்த ஒரு செய்தியும் தெரியவில்லை.
இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த மேகனா 2-வது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதோடு, சிக்கதனேகுப்பே கிராமத்தை சேர்ந்த 45 வயதான சங்கரண்ணா என்பவரும் மேகனாவும் நண்பர்களாக இருந்துள்ளனர். மேகனா குறித்து அனைத்து விவரங்களும் அறிந்த சங்கரண்ணா மேகனாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இரு வீட்டரின் அனுமதியுடன் மேகனா மற்றும் சங்கரண்ணாவிற்கு நேற்று (19-10-2021) சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது.
தங்களின் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் சங்கரண்ணா-மேகனா ஆகியோரின் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த சிலர் வயதானவரை திருமணம் செய்ததாக மேகனாவுக்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மேகனாவுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இன்றைய நவீன காலத்தில் யார் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்ற தனி மனித உரிமையை கூட புரிந்துக்கொள்ளாமல் இருப்பது இதன் மூலம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

மற்ற செய்திகள்
