'45 வயதில் கல்யாண வாழ்க்கைக்கு குட்பை சொன்ன பெண்'... 'ஆனா விவாகரத்துக்கு பின் இப்படி ஒரு சம்பவமா'?... 'மேடம், எங்க மனசு நொறுங்கி போச்சு'... நொந்துபோன 90ஸ் கிட்ஸ்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 27, 2021 04:57 PM

45 வயதில் திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்ட பெண் செய்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Woman Throws Divorce Party For Herself After Ending marriage life

இந்தியாவைச் சேர்ந்தவர் சோனியா குப்தா. இவருக்குக் கடந்த 2003ம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில், தனது கணவருடன் சோனியா லண்டனுக்குச் சென்று குடியேறியுள்ளார். ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாக தங்கள் திருமண வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு சென்ற நிலையில், நாட்கள் செல்ல செல்ல இருவருக்குள்ளும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

Woman Throws Divorce Party For Herself After Ending marriage life

இந்த சண்டை தீவிரமான நிலையில் சோனியா குப்தாவின் திருமண வாழ்க்கை கசந்து போக ஆரம்பித்துள்ளது. இதனால் விவாகரத்து பெற்று விடலாம் என்ற முடிவுக்குச் சோனியா குப்தா வந்துள்ளார். இதையடுத்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 3 வருடங்களாகச் சோனியா குப்தாவின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.

தற்போது தீர்ப்பு வந்து அவருக்கு விவாகரத்தும் கிடைத்த நிலையில், சோனியா குப்தாவின் 17 வருடத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. தீர்ப்பு வந்த அடுத்த நிமிடம் சோனியா குப்தா நடத்திய பார்ட்டி தான் லண்டன் இந்தியர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. தனக்கு விவாகரத்து கிடைத்ததைக் கொண்டாடும் விதமாக, பெரிய அளவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்த சோனியா குப்தா, அதில் கலந்து கொள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Woman Throws Divorce Party For Herself After Ending marriage life

அந்த விருந்தில்  'Finally Divorced' என்ற பேண்டை அணிந்து கொண்டு பார்ட்டி முழுவதும் வலம் வந்த சோனியா குப்தாவைப் பார்த்த பலரும் வாயடைத்துப் போனார்கள். விருந்து நிகழ்ச்சியின் இடையே பேசிய சோனியா, '' நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். கடந்த 17 ஆண்டுகளாக மிகுந்த மன உளைச்சலிலிருந்த எனக்கு இன்று தான் நிம்மதியாக உள்ளது. இதனை நான் கொண்டாட நினைக்கிறேன்'' என மகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், 90ஸ் கிட்ஸ் பலரும் நொந்துபோனார்கள். நாங்கள் இன்னும் திருமணம் செய்து அதற்கே பார்ட்டி கொடுக்கவில்லை. ஆனால் நீங்கள் விவாகரத்திற்கு எல்லாம் பார்ட்டி கொடுக்கிறீர்களே மேடம், என தங்களது மனக்குமுறலைக் கொட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman Throws Divorce Party For Herself After Ending marriage life | World News.