VIDEO: 'ஒலிம்பிக் போட்டியில் கியூட் லவ் ஸ்டோரி'!.. டிவி நேரலையில் சட்டென்று PROPOSE செய்த பயிற்சியாளர்!.. டபுள் ஓகே சொன்ன வீராங்கனை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் வாள்வீச்சு விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு அவரது பயிற்சியாளர் நேரலையில் ப்ரோப்போஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அர்ஜென்டினா நாட்டுக்காக வாள்வீச்சு விளையாட்டில் களம் கண்டவர் மரியா பெலன் பெரெஸ் மாரிஸ். 36 வயது வீராங்கனையான இவர், ஹங்கேரி நாட்டின் அன்னாவிடம் 12 - 15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று வெளியேறினார்.
இந்நிலையில், தோல்வி குறித்து ஊடகம் ஒன்றிற்கு மாரிஸ் Maria Belen Perez Maurice பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரது பயிற்சியாளர் Lucas Guillermo Saucedo, அவருக்கு பின்னால் நின்றபடி "இல்வாழ்க்கையில் இணையலாமா?" என்பதை சிறிய பேப்பரில் எழுதி சிம்பாலிக்காக கேட்க, அதை படித்ததும் ஆனந்த கூக்குரலில் "இனி வாழ்க்கையில் இணைந்து பயணிக்கலாம்" என சம்மதம் சொல்லியுள்ளார். அது அந்த ஊடகத்தின் கேமராவில் பதிவாகியுள்ளது.
வாள்வீச்சு விளையாட்டு மூலமாக தான் இருவருக்குமான அறிமுகமும், சந்திக்கின்ற வாய்ப்பும் கிட்டியுள்ளது. இருவரும் அர்ஜென்டினாவுக்காக வாள் வீசி விளையாடி உள்ளனர். அப்போது இருவரும் நட்பாக பழகியுள்ளானர். பின்னர் மாரிஸின் பயிற்சியாளரானார் Saucedo. நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மலர்ந்தது.
பயிற்சியாளர் Saucedo, மாரிஸின் காதலராக 17 ஆண்டு காலம் இருந்துள்ளார். தற்போது தான் இருவரும் மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
Y después del combate de esgrima le pidieron casamiento a María Belén Pérez Maurice en vivo. pic.twitter.com/wEmGuOW7CB
— Rústico (@lautarojl) July 26, 2021
இதுகுறித்து Saucedo கூறுகையில், "அவர் போட்டியில் தோல்வியுற்றதும் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். அவரது வாடிய முகத்தை மாறா புன்னகையுடன் இருக்க செய்யும் நோக்கில் ப்ரோப்போஸ் செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.