'சோறு' பொங்குறதுல என் 'பொண்டாட்டிய' அடிச்சுக்க ஆளே இல்ல...! யோவ், 'அடுப்பு' பக்கம் இருக்குறப்போ கிட்ட போயிடாதயா...! - என்னடா 'இப்படி' கெளம்பிட்டீங்க...?
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியாவை சேர்ந்தவர் கொய்ருல் அனாம், இவர் செய்துள்ள காரியம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனாம் என்பவர், மனைவியாக ரைஸ் குக்கரை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துள்ளார்.
வெறும் திருமணம் செய்ததோடு நின்றுவிடாமல், சட்டப்பூர்வமாக ஆக்குவதற்காக அந்நாட்டு சட்டதிட்டத்தின் படி முறையாக அலுவலகம் சென்று பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படத்தில், ஆடம்பரமான திருமண உடை அணிந்திருந்தார். பிலிப்ஸ் கம்பெனி அரிசி குக்கர் மணமகளின் முக்காடு அணிந்திருந்தது தான் உச்சக்கட்ட காமெடி.
ஒரு படத்தில், மணமகனும், மணமகளும் ஒன்றாக தோற்றமளிப்பதையும், மற்றொரு படத்தில், திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான சம்பிரதாயங்களை முடிக்க திருமண ஆவணங்களில் அனாம் கையொப்பமிடுவது போலவும் புகைப்படம் உள்ளது. (மணமகள் கையெழுத்து போடவில்லையே...!)
அவர் மற்றொரு புகைப்படத்தில் தன்னுடைய அன்பு மனைவியை முத்தமிடுவதையும் காணலாம். இதுகுறித்து அனாம் தெரிவிக்கையில், என் மனைவி வெள்ளையாக இருக்கிறாள். ஆனால் பேசாமல் அமைதியாக இருப்பாள்.
அரிசி சமைப்பதில் அவள் தான் அரசி. ஆனாலும், நான்கு நாட்களுக்குப் பிறகு தன்னுடைய காதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அனாம் அறிவித்துள்ளார்.
நீங்கள் தான் உங்கள் அன்பு மனைவியை கொண்டாடிக் கொண்டிருந்தீர்கள், அப்புறம் ஏன் சில தினங்களில் விவாகரத்து செய்தீர்கள் என்று பலர் கேட்டனர். பிரிவுக்குப் பின்னால் உள்ள காரணம் குறித்து அவர் கூறுகையில், அவள் அரிசி சமைப்பதில் கெட்டிக்காரி தான். ஆனால், வேறு எந்த உணவுகளையும் செய்வதில் சிறந்தவள் அல்ல. மொத்தத்தில் நான் தேடுவது ஒரு சகலகலா வல்லவளை.
திருமணம் மற்றும் விவாகரத்து எல்லாம் ஒரு காமெடியாக ஒருபக்கம் இருந்தாலும், அந்த நபர் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆவதற்காக இப்படியெல்லாம் செய்ததாக கூறப்படுகிறது.
Putih, pendiam, pintar memasak, idaman sekali 🥰 pic.twitter.com/vih2KGkAuz
— RJ (@lagidirumah) September 23, 2021

மற்ற செய்திகள்
