அட பாவி பயலுகளா...! ரோட்டு சைடுல 'என்ன காரியம்' செஞ்சு வச்சுருக்கீங்க...? 'அதுவும் ஒண்ணு ரெண்டு இல்ல...' 'ஒரு கிலோ மீட்டருக்கு...' - 'என்னத்த' சொல்றதுன்னே தெரியல...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் நெடுஞ்சாலை பகுதியில் ஒரு கி.மீ தூரத்திற்கு ஆணுறைகள் வீசப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே இருக்கும் கதசந்த்ரா மேம்பாலத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்திற்கு ஆணுறைகள் சாலையில் விசப்பட்டுள்ளன.
அந்தப்பகுதியில் ஸ்ரீ ராஜ் என்ற தியேட்டர் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தியேட்டர் நிர்வாகிகளும், அப்பகுதி மக்களும் கூறும்போது, இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன் நடக்கவில்லை எனவும், இந்த ஆணுறைகள் எப்படி வந்தது? அதனை வேண்டும் என்றே யாரேனும் வீசி சென்றார்களா? என கண்டறிய வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதோடு, சாலையில் இருந்த ஆணுறைகளில் சில ஆணுறைகள் உபயோகிக்காதவை போன்றும் காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வாகனத்தில் ஆணுறைகள் ஏற்றி செல்லும் போது தவறுதலாக கீழே கூட விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக இருக்கும் இப்பகுதியில் ஆணுறைகள் வீசியெறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
