தன்னைத்தானே 'கல்யாணம்' கட்டிக்கிட்ட பெண்ணிற்கு வந்த ஒரு மெசேஜ்...! 'நீங்கள் உங்களை டைவர்ஸ் பண்ணிவிட்டு...' - அடியாத்தி, மிரண்டு போன மாடல் அழகி...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Sep 28, 2021 08:21 PM

பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டு ஆண்களுக்கு ஒரு சவுக்கடி பதிலையும் தெரிவித்துள்ளார்.

Arab sheikh wanted to marry the brazil model married himself

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆண்களை காதலித்து வெறுத்து போய் தன் வீட்டில் வளர்த்த நாயையே திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் ஆண்களை தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி தன்னையே திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் சாவோ பாலோ பகுதியை சேர்ந்தவர் கிறிஸ் கலேரா. லாஞ்சரி மாடலான கிறிஸுக்கு பல ஆண்டுக்கால முயற்சிக்குப் பிறகு ஆண்கள் மீது நம்பிக்கை இழந்தக் காரணத்தால் ஆண்களையே வெறுத்து ஒதுக்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் மணப்பெண் போன்று உடை அணிந்து தேவாலயத்தில் காத்திருந்துள்ளார். சரி மணமகன் தான் யாரோ வருவார் என தேவலாயத்தில் இருந்தவர்கள் நினைக்க கிறிஸ் தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டார்.

கிறிஸ் திருமணத்தின் போது தேவாலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கிறிஸ் கூறும் போது, 'எனது திருமணம் இப்போது இணையத்தில் வைரலாகவே பலர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து மெசேஜ் அனுப்பத் துவங்கினார்கள்.

என்னுடைய நாட்டை தவிர அரபு நாட்டு ஷேக் ஒருவரும், 'உங்களை நீங்கள் திருமணம் செய்து கொண்டதால் நீங்கள் விவாகரத்து செய்துகொண்டு என்னை மணந்துக்கொள்ளுங்கள்' எனக் கேட்டர். அதோடு, எனக்கு ரூ. 3 கோடிக்கும் மேல் வரதட்சணை தருகிறேன் என்றும் கூறினார்.

ஆனால், எனக்கு ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை. என்னை அவரால் விலைக்கு வாங்க முடியாது. நான் விற்பனைக்கு அல்ல. மேலும் என்னை நானே திருமணம் செய்து கொண்டதற்காக பலரும் என்னை கிண்டல் செய்து வருகின்றனர். எனக்கு இதுகுறித்து ஒரு கவலையும் இல்லை' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Arab sheikh wanted to marry the brazil model married himself | World News.