டீக்கடை முன்பு 'எழுதி' வைத்த வாசகம்...! 'இங்கிலாந்து'ல இருந்துலாம் போன்கால் வருது...! மனசே வெறுத்து போய் தான் 'போர்டு' வச்சேன்...! - இப்போ என் செல்போனுக்கு 'ரெஸ்ட்' இல்ல...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா மாநிலம் வல்லாச்சிராவை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தன்னுடைய டீக்கடை முன்பு எழுதி வைத்த வாசகத்தினால் உலகம் முழுவதும் இருந்து அழைப்பு வந்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு ஒரு துணை வேண்டும் என விரும்பிய உன்னிகிருஷ்ணன் 'மணமகள் தேவை' என்று தன்னுடைய டீக்கடை முன்பாக ஒரு போர்டு வைத்துள்ளார். மேலும் அதில் முக்கியமாக ஜாதி, மதத்தை தான் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். டீக்கடை முன் 'மணமகள் தேவை' போர்டு வைக்கப்பட்டதற்கான காரணத்தை உன்னி கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'நான் கூலி தொழிலாளியாக வாழ்ந்து வந்தேன். சில மாதங்களுக்கு முன் என் தலையில் ஒரு கட்டி வந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அறுவை சிகிச்சைக்கு பின் முழுமையாக குணமடைந்து நலமாக உள்ளேன். எனக்கும் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு லாட்டரி கடையை தொடங்கினேன். பின்பு அது டீக்கடையாக விரிவுப்படுத்தி, தற்போது வியாபாரம் சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
அடுத்தகட்டமாக ஒரு திருமணம் செய்துக் கொள்ளலாம் என முடிவு எடுத்தேன். அதற்காக வழக்கம் போல் கல்யாணத் தரகரை போய் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது ஜாதகத்தை வைத்து கொண்டு உறவினர்கள் வரன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது சொத்தை, இது சரியில்லை என்று வருகிற வரன் எல்லாமே பாதியில் கழன்று விடுகிறது. ஆகவே இதெல்லாம் சரி வராது என்று டீக்கடை முன் போர்டு வைக்கலாம் என முடிவெடுத்தேன்' என்று கூறியுள்ளார்.
டீக்கடை முன்பாக வைக்கப்பட்ட போர்டை உன்னியின் நண்பர் ஒருவர் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து எக்கச்சக்க அழைப்புகள் அவருக்கு வர தொடங்கி உள்ளது. இதில், ஆச்சரியம் என்னவென்றால் இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து அழைப்புகள் வருகிறது. தற்போது வரும் அழைப்புகளை எடுத்து பேசுவதற்கு கூட நேரமில்லாமல் தவிப்பதாக உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
