ரொம்ப 'டார்ச்சர்' பண்ணினாரு...! 'என்னையும் சேர்த்து மொத்தம் அஞ்சு மனைவிங்க, இப்போ மறுபடியும்...' - முன்னாள் அமைச்சர் குறித்து வெளிவந்துள்ள 'பகீர்' தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமூன்றாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, ஆறாவது திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மீது, உத்தர பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆட்சி நடந்தபோது, அமைச்சராக பதவி வகித்தவர் சவுத்ரி பஷீர். அதன்பின்னர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சில ஆண்டுகள் கழித்து அந்த கட்சியில் இருந்தும் விளக்கியுள்ளார்.
இவரின் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சவுத்ரி பஷீரின் 3-வது மனைவி நக்மா, சமூக வலைதளத்தில் 'வீடியோ' ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது, 'சவுத்ரி பஷீருக்கு நான் உட்பட மொத்தம் ஐந்து மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் அவர், ஷயிஸ்டா என்ற பெண்ணை ஆறாவது திருமணம் செய்ய இருப்பதாக கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.' என்று தெரிவித்திருந்தார்.
இது பற்றி அவரிடம் கேட்டபோது, 'என்னை அடித்து காயப்படுத்தினார். 'முத்தலாக்' வாயிலாக என்னை விவாகரத்து செய்து வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டார். கடந்த 2012-ல் தான் பஷீரை திருமணம் செய்தேன். அப்போது இருந்தே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை வாட்டி வதைத்து வருகிறார்.
பெண்களை துன்புறுத்துவது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.' இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனையடுத்து முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் சவுத்ரி பஷீர் மீது, உத்திரப் பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
