VIDEO: இதுக்கு மேல 'புண்படுத்த' என்னங்க இருக்கு...? 'ஆனா ஒண்ணு, இன்னும் 2 நாள் விடாம மழை பெஞ்சாலும்...' - கொளுந்துவிட்டு எரியுற 'வயிற' அணைக்க முடியாது...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மேரேஜ் ஃபோட்டோஷூட் என புல்வெளியில் கட்டிப்பிடித்து உருண்ட இளம் காதல் ஜோடிகளின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இப்போதிருக்கும் 2k கிட்ஸ் திருமணத்திற்கு செய்யும் செலவை விட அதற்கு முன் நடைபெறும் ப்ரீ வெட்டிங் ஷூட்டிற்கு அதிக அளவில் செலவு செய்து ஃபோட்டோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர். முன்பெல்லாம் பிரபலங்களின் கல்யாண ஃபோட்டோ மட்டுமே ட்ரெண்ட் ஆன நிலையில் இப்போது ட்ரெண்ட் ஆக வேண்டுமென்றே சில இளசுகள் ஃபோட்டோ ஷூட்டை நடத்தி வருகின்றனர்.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது 90'ஸ் கிட்ஸ் தான் என்று சமூகவலைத்தளங்களில் புலம்புவதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். இளம் காதல் ஜோடிகள் நடத்தும் இந்த போட்டோஷூட் எல்லைகளை மீறி சொல்வதால் நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு எதிர்கருத்துக்களை அள்ளிவீசி வருகின்றனர். சில போட்டோஷூட் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு கூட சென்றுள்ளது.
இந்நிலையில், ஒரு காதல் ஜோடியின் கட்டிப்பிடித்து புல்வெளியில் உருளும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் சிவப்பு கலர் டிரஸ் போட்டு கொண்டு சரிவான புல்வெளியில் காதல் ஜோடி உருளுவதை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம் எடுக்கிறார்.
இன்னொருவரோ 'நீங்க கீழ விழுந்தா நான் புடிச்சேகிறேன்' என்ற நிலையில் காதல் ஜோடியை தாங்குமாறு நின்று கொண்டிருக்கிறார். என்னதான் இயற்கையாக ஃபோட்டோ இருக்க வேண்டும் என எண்ணினாலும் இது போன்ற வீடியோக்கள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கத்தான் செய்கிறது.