'ஒரே அறையில் 11 வருஷம், யாருக்கும் தெரியாமல்'... 'இந்தியாவையே மிரள வைத்த காதல் ஜோடியை ஞாபகம் இருக்கா'?... யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 18, 2021 08:55 AM

நம்ம கில்லி படத்துக்கே டப் கொடுக்கும் அளவுக்குப் பயங்கரமாக யோசித்து அதை செய்து காட்டிய காதல் ஜோடியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.

Kerala Man Who Hid Girlfriend In Room For 10 years, Marries Her

கேரளாவின் பாலக்காடு அருகில் உள்ள அயலூரை சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு திடீரென மாயமானார். மகளைக் காணவில்லை என சஜிதாவின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், போலீசார் இளம்பெண் சஜிதாவை தீவிரமாகத் தேடி வந்தார்கள். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அந்த புகார் கிடப்பிலேயே போடப்பட்டது.

Kerala Man Who Hid Girlfriend In Room For 10 years, Marries Her

இந்நிலையில் சஜிதா அந்த பகுதியைச் சேர்ந்த ரஹ்மான் என்ற நபரைக் காதலித்து வந்தது தெரிய வந்தது. இது ஒருபுறம் இருக்க ரஹ்மானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் அவர் தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஹ்மானின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால் அவரையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் தான் ரஹ்மானின் சகோதரர் பஷீர், தனது சகோதரர் பக்கத்துக் கிராமத்தில் ஒரு பெண்ணோடு வசித்து வருவதைக் கண்டுபிடித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில் ரஹ்மானும் சஜிதாவும் 11 ஆண்டு ஒரே அறையில் வாழ்ந்தது தெரிய வந்தது.

Kerala Man Who Hid Girlfriend In Room For 10 years, Marries Her

ரஹ்மானின் வீட்டில் சஜிதா தங்கியிருந்தது அங்கிருந்த யாருக்கும் தெரியாது.  ரஹ்மான் எப்போதும் கோபமான முகத்துடன் இருப்பதால், அவரிடம் யாரும் அதிகமாகப் பேசுவதில்லை. அந்த வீட்டில் ரஹ்மானுக்கென்று ஒரு அறை இருந்துள்ளது, அந்த அறைக்குள் அவர் யாரையும் விடுவதில்லை.

தான் துவைக்கும் துணிகளை அறைக்குள்ளேயே உலர்த்திக்கொள்வார் என்றும், ஒரு சிறிய தொலைக்காட்சியில் ஏர்ஃபோன் பயன்படுத்தி டிவி பார்ப்பார் என்றும், காலைக் கடன்களுக்கு பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினார் என்றும், தன் கணவரின் உணவை தன்னோடு பகிர்ந்து உண்ணுவார் என்றும் சஜிதா தான் 11 வருடம் அறைக்குள்ளே வாழ்ந்த அனுபவத்தைக் கூறினார்.

Kerala Man Who Hid Girlfriend In Room For 10 years, Marries Her

சஜிதா வெளியில் செல்வதற்காக ஜன்னலில் ஒரு சில கம்பிகளை மட்டும் அகற்றி வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் சென்றும் வந்திருக்கிறார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. ரஹ்மானுக்கு பெண் பார்க்கலாம் என அவரது பெற்றோர் கூறிய நிலையில் அதற்குச் சிறிதும் மறுப்பு சொல்லாமல் ரஹ்மான் இருந்துள்ளார்.

Kerala Man Who Hid Girlfriend In Room For 10 years, Marries Her

ஆனால் வேற ஒரு டெக் நிக்கை கையாண்ட ரஹ்மான், பார்க்கும் பெண்களை எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வேண்டாம் எனத் தட்டிக் கழித்து வந்துள்ளார்.இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல் போன இருவரும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Kerala Man Who Hid Girlfriend In Room For 10 years, Marries Her

அப்போது இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாகச் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தனர். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து ரஹ்மானும் சஜிதாவும் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

Kerala Man Who Hid Girlfriend In Room For 10 years, Marries Her

ஆனால் இந்த திருமணத்திற்கு இருவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala Man Who Hid Girlfriend In Room For 10 years, Marries Her | India News.