‘மொட்டை மாடியில் தூங்கிய மனைவியை காணோம்’!.. கல்யாணம் ஆன அடுத்த நாளே புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுதலிரவு முடிந்த மறுநாள் புதுமணப்பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கோர்மி கிராமத்தை சேர்ந்தவர் சோனு ஜெயின். இருக்கு நீண்ட நாள்களாக திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இதனால் சோனு ஜெயின் விரக்தியில் இருந்துள்ளார். இந்த சமயத்தில் உதால் ஹாதிக் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார்.
சோனு ஜெயினின் நிலையை அறிந்த உதால் ஹாதிக், தனக்கு தெரிந்த பெண் ஒருவர் இருப்பதாகவும், அவரை திருணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார். இதற்காக 1 லட்சம் ரூபாம் தனக்கு தர வேண்டும் என்றும் உதால் ஹாதிக் கேட்டுள்ளார். உடனே அவருக்கு 90,000 ரூபாயை சோனு ஜெயின் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து சோனு ஜெயினுக்கும், அனிதா ரத்னக்குமார் என்ற பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த அன்று இரவு அனைவரும் அவரவர் அறையில் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது முதலிரவு அறையில் காத்திருந்த சோனு ஜெயினிடம், தனக்கு இங்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாக மணப்பெண் கூறியுள்ளார்.
இதனால் வீட்டின் மொட்டை மாடிக்கு தனது மனைவியை சோனு ஜெயின் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் மொட்டை மாடியிலேயே இரவு தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து கண் விழித்துப் பார்த்தபோது அருகில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி இல்லாததைக் கண்டு சோனு ஜெயின் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சோனுவின் மனைவி கிடைக்கவில்லை.
இதனை அடுத்துதான் பணத்துக்காக தான் ஏமாற்றப்பட்டது சோனு ஜெயினுக்கு தெரியவந்துள்ளது. மணப்பெண் அனிதா, சோனு தூங்கிய சமயத்தில் மொட்டை மாடியில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக சோனுவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பணத்துக்காக திட்டம் போட்டு மணமகனை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
