'கல்யாணம்' நடந்தது உண்மை தான்...! 'ஆனா மாப்பிள்ளை கூட இல்ல...' என்னய்யா சொல்றீங்க...? - 'இப்படியுமா' நடக்கும்...!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசில் நாட்டை சேர்ந்த 33 வயதான கிரிஸ் கேலரா, அந்நாட்டின் பிரபல மாடலாக இருந்து வருகிறார்.

இவர் தனது கடந்த காலங்களில் ஏற்பட்ட உறவு முறிவுகளால் மனம் விரக்தி அடைந்து இனி யாரையும் திருமணம் செய்யாமல் தனியாக வாழலாம் என்ற முடிவை எடுத்துள்ளார். ஆனாலும், திருமணம் செய்யாத குறை வேண்டாம் என்று தன்னை தானே திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
கேலராவின் இந்த திருமணம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தன்னுடைய இந்த தைரியமான முடிவு குறித்து கிரிஸ் கேலரா கூறும்போது, 'எனக்கு முன்பெல்லாம் வாழ்கையில் தனியாக இருக்க பயம் ஏற்படும். ஆனால், இப்போது நான் என்னை குறித்து நானே கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று உணர்ந்துள்ளேன். இதனை கொண்டாடவே என்னை நானே திருமணம் செய்து கொண்டேன்' எனக் கூறியுள்ளார்.
அதோடு, கிரிஸ் கேலராவின் இந்த முடிவை சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வரும் நிலையில், 'என்னை மற்றவர்களிடம் நிரூபிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நான் அவர்களின் கருத்துக்களை பார்ப்பதில்லை' என அவர்களுக்கும் பதிலளித்துள்ளார்.
ஒரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது, இது முதல்தடவை இல்லை. இதற்கு முன்னதாக 2020-ஆம் ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.

மற்ற செய்திகள்
