கர்நாடக மாநிலத்தின் 'புதிய முதல்வர்' தேர்வு...! 'ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அறிவிப்பு...' - இவரின் பின்னணி என்ன...?
முகப்பு > செய்திகள் > இந்தியாதேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் கழித்து கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்தது.
இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று பெங்களூருவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பாவும் கலந்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை ஆவார். ஜனதா தள கட்சியில் செயல்பட்டு வந்த இவர் 2008-ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 61 வயதாகும் இவர், 2019-ஆம் ஆண்டு முதல் கர்நாடக அமைச்சரவையில் பதவி வகித்து வருகிறார்.

மற்ற செய்திகள்
