சும்மா வீட்டுக்கு பின்னாடி 'நட்டு' வச்சிருக்காரு...! 'ஆரம்பத்துல சின்னதா தான் இருந்துச்சு...' அப்புறம் ஏன் 'இப்படி' ஆச்சு...? - பிரமிக்க வைக்கும் 'அதிசய' எலுமிச்சை பழம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாவழக்கமாக எலுமிச்சைப் பழம் கைக்குள் அடங்கும் அளவிற்கு சிறியதாகவே காய்க்கும். ஆனால் கர்நாடகத்தில் 2 கிலோ எடை அளவில் எலுமிச்சை பழம் காய்த்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இந்த அதிசய எலுமிச்சை பழம் மைசூர் மாவட்டம் பீடரஹள்ளி கிராமத்தை சேர்ந்த சனோஜ் என்பவரின் வீட்டில் காய்த்துள்ளது. இவர் அந்தப் பகுதியில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் பின்புறமாக ஒரு எலுமிச்சை செடியை நட்டு வளர்த்துள்ளார்.
அந்த செடியில் தான், இந்த ராட்சஸ எலுமிச்சை பழம் காய்த்துள்ளது. அதில் மொத்தம் மூன்று எலுமிச்சை பழங்கள் தான் காய்த்துள்ளது. மூன்றில் ஒரு எலுமிச்சை பழத்தின் எடை 2 கிலோ 150 கிராம் அளவில் இருந்துள்ளது. மற்ற 2 எலுமிச்சை பழங்களும் தலா 2 கிலோ எடை உள்ளது.
இதைக்கண்ட சனோஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆச்சரியம் தாங்கவில்லை. இந்த தகவலை கேள்விப்பட்ட அந்தப் பகுதி பொதுமக்கள் சனோஜ் வீட்டுக்கு வந்து குவிகின்றனர்.
பொதுவாக 2 கிலோவுக்கு எலுமிச்சை பழம் வாங்கினால் ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டு வரலாம். ஆனால் ஒரே எலுமிச்சை பழம் 2 கிலோ எடைக்கு இருப்பது அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்கும் விதமாக உள்ளது.
சிலர் அந்த எலுமிச்சை பழத்தை தங்களது செல்போனில் ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். அது தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சனோஜ் கூறும்போது, எங்கள் வீட்டில் எலுமிச்சை செடி வளர்த்து வருகிறோம். இது பாரசீக இன எலுமிச்சை. அதில் எலுமிச்சை பழம் முதலில் சிறியதாக இருந்தது. ஆனால், நாட்கள் செல்லும்போது அது பெரிய எலுமிச்சை பழமாக மாற்றமடைந்தது.
தற்போது ஒரு எலுமிச்சை பழத்தை பறித்துவிட்டேன். இன்னும் இரண்டு எலுமிச்சை பழங்கள் செடியில் உள்ளது. அது இன்னும் கொஞ்சம் பெரிதான பின்பு பறிப்பேன்' என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
