'கல்யாணம்' ஆகலேன்னா 'தயவுசெஞ்சு' இத படிக்காதீங்க.. 'செம' காதல்.. 73 வயது 'தாத்தா'வை மணக்கும் இளம்பெண்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Oct 11, 2019 01:38 PM

தன்னைவிட 40 வயது மூத்த தாத்தா ஒருவரை, இளம்பெண் திருமணம் செய்துகொள்ள உள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

73 years old man plan to marry young woman in australia

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ரேச்சல் ராபர்ட்ஸ்(33) என்னும் இளம்பெண், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டிற்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த நெவ் மெக்டேர்மோட்(73) என்னும் தாத்தாவைப் பார்த்துள்ளார்.

ரேச்சல் அவரைப் பார்த்தபோது அவர் காலில் அறுவைசிகிச்சை செய்துகொண்டு நடக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்திருக்கிறார். இதைப்பார்த்த ரேச்சல் அவருக்கு காரில் லிப்ட் கொடுத்துள்ளார். அப்போது அவர்கள் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அன்றில் இருந்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்து பேசி, பழகி வந்துள்ளனர். இருவருக்கும் காதல் இருந்தாலும் வயது வித்தியாசம் காரணமாக அதனை வெளிப்படுத்த தயங்கி உள்ளனர். சமீபத்தில் ரேச்சலின் தந்தை இறக்க அப்போது மெக்டெர்மொட் ரேச்சலின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

அப்போது இருவருக்கும் மீண்டும் காதல் துளிர்த்துள்ளது.

இவர்கள் இருவரின் காதலுக்கு உறவினர்கள், நண்பர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்துள்ளனர். 73 வயது தாத்தாவை இளம்பெண் மணக்கும் செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #AUSTRALIA #MARRIAGE