'நாங்க யாரையும் லவ் பண்ண மாட்டோம்...' '2K கிட்ஸின் அதிரடி சபதம்...' வைரலாகும் வீடியோ... !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 16, 2020 11:04 PM

கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர்கள் தினமாக கொண்டாடப்பட்ட நேரத்தில் காதலிக்க மாட்டோம் என கல்லூரி மாணவிகள்  சபதம் செய்த வீடியோ இணைய நெட்டிசன்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Students took the plunge they will not love anyone

காதலிக்க நினைப்பவர்களும், காதலிப்பவர்களுக்கும் ஏன் கல்யாணம் முடிந்தவர்களும் கூட தன் அன்பை வெளிப்படுத்த காத்திருக்கும் நாள் பிப்ரவரி 14 காதலர்கள் தினம்.   காதல் மாதமான பிப்ரவரியை, இளசுகள் பிப்ரவரி 1 முதல் 13ம் தேதி வரை பல விதங்களாக கொண்டாடி கடைசிநாளான பிப்ரவரி 14ஆம் தேதியை மிக விமர்சையாக கொண்டாடுகிறார்கள். அதற்கு குறைவில்லாமல் ஒரு சிலரும் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருவது வழக்கமாகி வருகிறது. தென்மாநிலங்களை விட வடமாநிலங்களில் இது ஒரு தொடர்கதையாகி வருகிறது.

இதுவரை இல்லாத வகையில் மகாராஷ்டிராவில் உள்ள மகளிர் கல்லூரி மாணவிகளை காதல் திருமணம் செய்ய மாட்டோம் என உறுதி மொழி எடுக்க வைத்துள்ளனர். "நாங்கள் யாரையும் நேசிக்க மாட்டோம், காதலித்து திருமணம் செய்துகொள்ள மாட்டோம்" என கல்லூரி முதல்வர் சொல்ல அதை அப்படியே அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் உறுதிமொழி போல் சொல்லி சபதம் எடுத்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி ஒரு பிரிவினரை தலை சுற்றவும், ஒரு பிரிவினரை  சந்தோஷமும் அடைய செய்துள்ளது.

Tags : #VALENTINESDAY