'உடல்கள வெச்சிட்டு இதெல்லாம் பண்ணாதீங்க' ... கடும் கட்டுப்பாடுகளுடன் ... குடும்பத்தினரிடம் வழங்கப்படவுள்ள நிர்பயா குற்றவாளிகள் சடலம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 20, 2020 10:36 AM

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் நான்கு பேர் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்ட நிலையில் அவர்களது சடலங்கள் சில கட்டுப்பாடுகளுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Nirbaya convicts bodies to be deliver with severe conditions

2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்து ஒன்றில் மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து ரோட்டில் வீசியது. இதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சம்பந்தப்பட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு பேரில் ஒருவரான சிறுவனுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதித்து சிறார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மீதமுள்ள ஐந்து குற்றவாளிகளில் ராம் சிங் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மதம் 22 ஆம் தேதி அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் அறிவித்திருந்தது. குற்றவாளிகளான வினய் சர்மா, அக்ஷய் குமாரின் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்ததால் திட்டமிட்டபடி 22 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. குற்றவாளிகளின் அனைத்து கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மார்ச் 20 அன்று காலை 5:30 மணிக்கு தூக்கு தண்டனையை டெல்லி  விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.

இதன்படி இன்று அதிகாலை நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேருக்கும் திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இருபது நிமிடங்கள் அவர்களது உடல்கள் தூக்கில் தொங்க விடப்பட்டது. நான்கு பேரும் இறந்ததாக மருத்துவர்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட நிலையில் டெல்லி தீந்தயாள் உபாத்தியா மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டது.

அங்கு ஒரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உடல்கள் ஒப்படைக்கப்படும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சடலத்திற் வைத்து ஊர்வலமோ, வேறு ஏதும் போத அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபடக்கூடாது என குடும்பத்தினரிடம் எழுதி வாங்கிய பின் உடல்கள் ஒப்படைக்கவுள்ளது.

Tags : #NIRBAYA CASE #RAPISTS