‘ஊரடங்கு சிறப்பு நிவாரணம்’.. ஒரே நாளில் 4.7 கோடி ஏழை பெண்கள் பேங்க் அக்கவுண்டில் ரூ.500 போட்ட மத்திய அரசு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 04, 2020 09:59 AM

கொரோனா சிறப்பு நிவாரண உதவித்தொகையாக ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

Govt credits Rs500 over 4.07 crore women Jan Dhan account holders

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தியது. இதனால் கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள், தனியார் துறையினர் பலரும் வீட்டில் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 26ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை அறிவித்தார்.

அப்போது ‘ஜன்தன் வங்கி கணக்கு’ வைத்துள்ள ஏழைப்பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மாதந்தோறும் ரூ.500 சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என்றும் இந்த தொகை அவர்களது வங்கு கணக்கில் செலுத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார். ஊரக வளர்ச்சித்துறையால் விடுவிக்கப்படுகிற இந்த நிவாரண உதவித்தொகை ஏப்ரல் முதல் வார இறுதியில் 20 கோடியே 39 லட்சம் பெண்களி  ஜன்தன் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 4 கோடியே 7 லட்சம் ஏழை பெண்களின் ஜன்தன் வங்கி கணக்கில் தலா ரூ.500 செலுத்தப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.