கொரோனா பாதிப்பு: ‘எப்போது முதல் ரேஷன் கடைகளில்’... ‘ஆயிரம் ரூபாய் பணம், இலவச அரிசி வழங்கப்படும்?’... 'வழி முறைகளுடன் கூட்டுறவுத் துறை அறிவிப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 26, 2020 11:12 PM

தமிழகத்தில் எப்போது முதல் ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவை அடுத்து கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

Due to Coronation, Rs.1,000 has given to ration card from April 2-15

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல் ஆகியவற்றால் தமிழகம் முடக்கப்பட்டு உள்ளதால், தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்  என அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய்  ஏப்ரல் 2 முதல் 15 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரையும் விலையின்றி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக, அட்டைதாரர்களுக்கு ஊழியர்கள் மூலம் டோக்கன் கொடுக்கப்படும். அதில் எந்த தேதியில்? எந்த நேரம்? வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டு இருக்கும். அட்டைதாரர்கள் அந்த தேதியில் வந்து பெற்று கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் வரிசையில் நிற்க ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு அடையாளக்குறியிடவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Tags : #EDAPPADIKPALANISWAMI #MONEY #RATION #CARD #AMOUNT