'கொரோனாவை தடுக்க... கோதுமை விளக்கு வழிபாடு!'... காட்டுத்தீ போல் பரவிய தகவலால்... சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனாவை நெருங்கவிடாமல் தடுக்க கோதுமை விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா என்ற ஆட்கொல்லி கொடூர அரக்கனை ஒழித்துக்கட்ட மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்று பரவிய ஒரு தகவல் பரபரப்பை கிளப்பியது.
அதாவது வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ, கோதுமை மாவினால் அத்தனை எண்ணிக்கையிலான விளக்குகள் செய்து, அதனை தங்களுடைய இஷ்ட தெய்வங்கள் முன்பு வைத்து வழிபடவேண்டும். பின்னர் அந்த விளக்குகளை வீட்டின் முன்பு கோலமிட்டு அதன் நடுவில் வைக்கவேண்டும். இவ்வாறு செய்தால் கொரோனா வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை நெருங்காது என்று அந்த தகவல் சொல்லியது.
காட்டுத்தீப்போல இந்த தகவல் பரவியது. தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு இந்த தகவலை பகிர்ந்தனர். சென்னை ஆயிரம் விளக்கு, மாதவரம், புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று கோதுமை மாவினால் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தததை காண முடிந்தது.
