‘ஊழியர்களுக்கு நற்செய்தி’... ‘பி.எஃப் பணம் எடுக்க அதிரடி சலுகை’... ‘ஆன்லைனில் பணத்தை பெறுவது எப்படி?’...
முகப்பு > செய்திகள் > இந்தியாகையில் பணம் இல்லாமல் தவிக்கும் இந்த நேரத்தில், பிஎஃப் கணக்குகளிலிருந்து மக்கள் தங்கள் தேவைக்கான பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு சிறப்புச் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கான ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் மத்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இதன்படி தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து அட்வான்ஸாக, 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், அதனைத் திருப்பிச் செலுத்த தேவையில்லை எனவும் கூறப்படுகிறது. இது மற்ற திட்டங்களைப் போல் அல்லாமல், பணத்தை எடுக்க விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் எளிமையாக கிடைக்கும் என்று தொழிலாளர்கள் நல வாரியம் தெரிவித்துள்ளது.
இதனை ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?
1. EPFO இணையதளத்திற்கு சென்று (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) தங்களது UAN எண்ணை பதிவு செய்து PASSWORD கொடுத்து கணக்கிற்குள் செல்ல வேண்டும்.
2. பின்னர் ONLINE SERVICES மற்றும் CLAIM என்ற பிரிவிற்குச் செல்ல வேண்டும்
3. அதன்பிறகு வங்கி எண்ணை அதாவது பேங்க் அக்கெவுண்ட் நம்பரை சரிபார்க்க வேண்டும்.
4. பின்னர், பேங்க் செக் மற்றும் பாஸ்புக்கினை ஸ்கேன் செய்து, JPG and JPEG பார்மேட்டில் 100 கேபி முதல் அதிகபட்சமாக 500 கேபி வரை உள்ளவாறு அப்லோடு செய்யப்பட வேண்டும்.
5. அதன்பிறகு Outbreak of pandemic என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
6. பின்னர், ஆதார்கார்டில் உள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனைப் பதிவு செய்தால் விதிமுறைகளின் படி தாங்கள் கேட்ட தொகை வங்கிக் கணக்கில் 3 நாட்களில் வரவு வைக்கப்படும். இதன்மூலம், ஊழியர்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் பயன் பெற்றுக் கொள்ள முடியும்.
