'லாபம் தான் முக்கியம்' மொத்தமாக 5000 ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல இந்திய' நிறுவனம்... கலக்கத்தில் ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 05, 2020 03:51 PM

பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ஓயோ நிறுவனம் மொத்தமாக 5000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Indian Startup OYO to cut 5,000 jobs globally, says Report

ஓயோ நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் வர்த்தகம் செய்து வருகிறது. சமீபகாலமாக ஓயோ நிறுவனம் நஷ்டப்பாதையில் பயணம் செய்து வருகிறது. சமீபத்தில் சீனாவில் ஓயோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்தது. ஆனால் கொரோனா காரணமாக வர்த்தகம் பெரியளவில் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் உலகம் முழுவதும் சுமார் 5000 ஊழியர்கள் வரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஓயோ நிறுவனத்திற்காக சுமார் 30000 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் அவர்களில் 17% பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில வாரங்களில் அந்நிறுவனத்தில் இருந்து 5000 ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனாவில் மட்டும் 3000 ஊழியர்களை வெளியேற்ற ஓயோ முடிவு செய்திருக்கிறதாம். இந்நிறுவனத்தில் முதலீடு செய்த சாஃப்ட் பேங்க் நிறுவனம் தான் முதலீடு செய்திருக்கும் அனைத்து நிறுவனங்களையும் லாபகரமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. இதனால் தான் ஓயோ நிறுவனம் ஊழியர்களை வெளியேற்றி லாபக்கணக்கு காட்ட முடிவு செய்துள்ளது.

Tags : #JOBS