உங்க 'உண்மையான' வயசு என்ன?... தப்பு செய்து 'மாட்டிக்கொண்ட' இளம்வீரர்கள்... டென்ஷனில் 'தவிக்கும்' பிரபல அணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Jan 01, 2020 02:50 PM
தங்களது உண்மையான வயதை மறைத்ததாக கொல்கத்தா அணியின் இளம்வீரர்கள் இருவர் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவம் மவி, நிதிஷ் ராணா இருவரும் தங்களது வயதை குறைத்துக்காட்டி, உள்ளூர் அண்டர்16 மற்றும் அண்டர் 18 போட்டிகளில் விளையாடிய விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. அதுபற்றிய விசாரணை தற்போது நடந்து வருவதாகவும், இதனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இரண்டு வீரர்களுக்கும் சிலகாலம் தடை விதிக்கப்படலாம் என்றும கூறப்படுகிறது.
நிதிஷ் ராணா கடந்த 2015-ம் ஆண்டு வயது மோசடி காரணமாக தடை செய்யப்பட்ட 22 வீரர்களில் ஒருவர் ஆவார். இந்த பிரச்சினையை பிசிசிஐ தற்போது தூசுதட்டி இருக்கிறது. இதேபோல சிவம் மவி கடந்த 2018-ம் ஆண்டு உத்தர பிரதேச அணிக்காக அண்டர் 19 அணியில் இடம்பெற்று ஆடினார். இருவரும் தற்போது விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர்.
இரண்டு வீரர்களும் கொல்கத்தா அணிக்கு முக்கிய வீரர்களாக திகழ்வதால், இந்த பிரச்சினையை கொல்கத்தா அணி தற்போது உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருப்பதால், ஒருவேளை இருவருக்கும் தடை விதிக்கப்படும் பட்சத்தில் கொல்கத்தா அணிக்கு அது பெரிய பின்னடைவாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.