‘தும்பிக்கையால் தூக்கி அடித்து’.. ‘கும்கியாகவே மாறி யானையை விரட்டிய நபருக்கு’ நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள மாலூர் மற்றும் பங்காருபேட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரிந்துகொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் பேட்ரஹள்ளி கிராமத்திற்குள் நுழைந்து சுற்றித் திரிந்த யானைகளை வனஊழியர்கள் காட்டுக்குள் விரட்டி அடிக்க முற்பட்டனர்.
அந்த சமயத்தில் யானைகளை விரட்டிச் சென்ற வன ஊழியர் பூட்டு முனியப்பன் என்பவரை ஒரு யானை தனது தும்பிக்கையால் தூக்கி அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாலூர் போலீசார் உயிரிழந்த பூட்டு முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
