"மாப்ள இந்தா 5வது கேள்விக்குரிய பிட்டு..." "கரெக்டா கேட்ச் புடிடா..." "10வது பாஸ் பண்ணி எப்புடியாவது கலெக்ட்ராஆயிடு..." வைரலான மஹாராஷ்ட்ரா 'புள்ளிங்கோ'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 04, 2020 11:07 AM

மஹாராஷ்ட்ராவில் 10ஆம் வகுப்பு மெட்ரிக் தேர்வின் போது, தேர்வு மைய அறையின் கம்பவுண்ட் சுவர் மீது ஏறி சிலர், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 'பிட்'களை வீசிய காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A gang threw \'bits\' at the 10th grade matriculation exam

 

மஹாராஷ்ட்ராவில் 10ம் வகுப்பு மெட்ரிக் பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதி வருகின்றனர்.

இந்நிலையில்,  யவாத்மால் மாவட்டம் மஹாகோன் என்ற நகரில் தேர்வு மையம் ஒன்றில் முறைகேடு நடைபெற்றுள்ளது சமூக வலைதளங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அங்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தேர்வு மையத்தின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி சிலர் மாணவர்களுக்கு 'பிட்' களை வீசி எறிந்த வண்ணம் இருந்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் உடனடியாக போலீசாருக்க தகவல் அளித்தனர். உரிய பாதுகாப்பு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : #MAHARASHTRA #BOARDEXAM #10TH EXAM #GANG #THREW BITS #VIRAL PICTURE