'கோயம்பேட்டில் இருந்து காய்கறிகள், மளிகை பொருட்கள் 'டோர் டெலிவரி' .. ஆர்டர் செய்வதற்கான ஆப்ஸ் பற்றிய விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 08, 2020 02:21 PM

சென்னை கோயம்பேட்டில் முதற்கட்டமாக 100 நடமாடும் காய்கறி வாகனங்களின் சேவைகள்  தொடங்கப்பட்டுள்ளது.

Vegetables,groceries will be deilvered to doorsteps using this apps

தவிர, கோயம்பேடு மார்கெட் விலைக்கே 16 வகையான காய்கறிகள், 5 வகையான பழங்கள் கொண்ட தொகுப்புகள் Swiggy, Zomato, Dunzo நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் என்றும், 9025653376 என்ற அலைபேசி எண்ணில் மதியம் ஒரு மணிவரையிலும் காய்கறிகைளை ஆர்டர் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென இயங்கும் CMDA செயலி மூலமாகவும், www.cmdachennai.gov.in இணையதளத்திலும் 250 முன்பணம் செலுத்தியும் காய்கறிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் 5 நாட்களுக்கு தேவைப்படும் காய்கறிகள், பழங்களை மக்கள் ஒரே நாளில் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதேபோல் மளிகைப் பொருட்களும் மோட்டர் சைக்கிள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள்கள் மூலம் வீட்டு வாசலில் டெலிவர் செய்யப்படும் என்று சென்னை மாநகர பெருநகராட்சி அறிவித்துள்ளது.