'மது இனிமேல் வீட்டுக்கே வந்திடும்...' 'ஒரு போன் மட்டும் பண்ணி ரிசர்வ் பண்ணிடுங்க...' மேற்கு வங்க அரசின் அதிரடி முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெல்போனில் ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டும் தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிவிரைவாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது இந்திய அரசு.
மேற்குவங்கத்திலும் பின்பற்றப்படும் இந்த தடை சட்டத்தால், அத்யாவசிய தேவைகளுக்காக இயங்கும் கடைகளை தவிர மற்ற அனைத்து துறைகளை சார்ந்த நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டுள்ளது. ஆனால் இங்கு மதுபானக்கடைகள் மூட அனுமதி இல்லை. ஆனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் கொரோனா வைரஸிற்கு பயந்து மதுபானக்கடைகளை மூடி உள்ளனர்.
அதனால் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் சில கட்டுப்பாடுகளுடன் வீடுகளுக்கு நேரிடையாக மதுபானம் விநியோகிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் அந்தந்த பகுதிகளில் செயல்படும் காவல் நிலையங்கள் மூலம் மதுபானக்கடைகளுக்கு பாஸ் வழங்கப்படும் எனவும், ஒரு கடைக்கு அதிகபட்சம் 3 பாஸ்கள் தான் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மதுபானம் வாங்குபவர்கள் முதலில் அதற்காக அருகில் இருக்கும் மதுபானக்கடைகளை போனில் அழைத்து முன்பதிவு செய்யவேண்டும். அதன் பிறகு சில்லறை விற்பனையாளர்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வீடுகளுக்கு தேடிச்சென்று மதுபானம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க அரசு, சமீபத்தில் இனிப்பு கடைகளுக்கும் அதன் வேலை நேரத்தை தளர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
