‘டைட்டான ஜீன்ஸ் பேண்ட்’!.. ‘8 மணிநேர ட்ராவல்’.. இளம் தொழிலதிபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 25, 2019 11:04 AM

இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து 8 மணி நேரத்துக்கும் மேலாக காரில் பயணித்த தொழிலதிபர் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Delhi man suffers cardiac arrest due to tight jeans

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சவுரப் சர்மா (30) என்பவர் தனது நண்பர்களுடன் காரில் சென்றுகொண்டு இருந்துள்ளார். சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக காரை எங்கேயும் நிறுத்தாமல் பயணம் செய்துள்ளனர். அப்போது அவரது கால் முட்டியின் கீழ் பகுதி மெதுமாக சுருவங்குவது போல் உணர்ந்துள்ளார்.

இதனை அடுத்து மறுநாள் சில மருந்துகளை காலில் தடவிவிட்டு அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சில நிமிடங்களில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அலுவலகத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் 6 நாள் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த மருத்துவர்கள், ‘மிகவும் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட அணிந்துகொண்டு சவுரப் நீண்ட தூரம் பயணித்துள்ளார். அதனால் அவரது ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது. இதன் விளைவாக அவரது இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதய துடிப்பு குறைந்து மயங்கி விழுந்துள்ளார்’ என தெரிவித்துள்ளனர். இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததன் விளைவாக டெல்லி தொழிலதிபர் மரணத்தின் விளிம்பு வரை சென்றுவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DELHI #JEANS #CAR #TRAVEL