'ஒரே ஒரு போன் கால்'.. 'சென்னை என்ஜினியரின் சுயரூபம் தெரிந்ததும்'.. கதறும் மனைவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 20, 2019 03:44 PM

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தேவிகா, என்பவர் தனது கணவர் அஜித்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில்தான், தேவிகாவுக்கு கேரளாவில் இருக்கும் ஜோதி என்பவரிடம் இருந்து ஒரு போன் கால் வந்துள்ளது. அதைக் கேட்டதும் தேவிகா நிலைகுலைந்துள்ளார்.

Engineer who living in chennai cheats 3 woman in the name of marriage

காரணம், ஜோதி அஜித்தைப் பற்றிய முழு விபரத்தையும் கூறியுள்ளார். அதன்படி ஈவண்ட் மேனேஜ்மெண்ட் தொழில் செய்யும் அஜித், நிறைய பெண்களிடம் சகஜமாக பழகுபவரென்றும் இதன் விளைவாக அவர் முன்னமே 1998-ல் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், தங்களுக்கு 18 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் இருப்பதாக ஜோதி கூறியுள்ளார்.

அதன் பின்னர், அஜித் 2002-ஆம் ஆண்டு டெலிலா என்கிற பெண்ணை திருமணம் செய்ததாகவும், அவர்களுக்கு 12 வயது மகன் உள்ளதாகவும் ஜோதி கூற, தேவிகாவுக்கு தூக்கிவாரிப்போட்டது. கடந்த 2012-ஆம் ஆண்டு தேவிகாவுக்கும் அஜித்துக்கும் திருமணம் நிகழ்ந்தது. ஆனால் அஜித் 2 திருமணமானவர் என்று தேவிகாவுக்கு தெரியாது. ஆனால் முன்னதாக எழுந்த கருத்து வேறுபாட்டினால் ஏற்கனவே அஜித்தை பிரிந்து வாழ்ந்துகொண்டிருந்த நிலையில் தேவிகாவுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வந்துள்ளது.

இதனிடையே 4வதாக வேறு ஒரு பெண்ணுடன் அஜித் தொடர்பு வைத்திருப்பதாகவும், அஜித் தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் தேவிகா புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை எடுத்துக்கொண்ட போலீஸார், அஜித்தையும் ஜோதி, டெலிலா உள்ளிட்டோரையும் விசாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனையெல்லாம் ஒப்புக்கொண்ட அஜித் கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவரென்பதும் என்ஜினியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கின் போது‘என்னைப் போல எத்தனை பெண்களின் வாழ்வை சீரழித்திருப்பாய். பெண் சாபம் உன்னை சும்மா விடாது’ என்று அஜித்தைப் பார்த்து கோபமாக கூறி தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

Tags : #MARRIAGE #CHEAT